பட்டப்படிப்பு இல்லாமல் தன்தேவைக்கேற்ப சம்பாதிக்க தொழில் இல்லையா என்று நம்மில் பலர் சிந்தித்திருக்கிறோம். அல்லது தற்போது நாம் செய்யும் தொழில் போதுமான வருமானம் தருவதாக இல்லாதபோது, துறையை மாற்றுவது பற்றி சிந்தித்திருப்போம். ஆனால் நாளாந்த கட்டாய செலவுகள் தலைக்குமேல் போயிருக்கும் நிலையில் 4 வருடங்களை ஒரு பட்டப்படிப்புக்கு செலவிடுவது நினைத்துப்பார்க்க முடியாததொன்று.
பல்வேறுபட்ட துறைகளில் காணப்படும் நலல் வருமானம் தரும் 10 தொழில்களை இப்போது பார்ப்போம். இவை எவற்றுக்கும் பட்டப்படிப்பு தேவையில்லை.
இத்தரவுகள் PayScale.com என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
1. விற்பனை முகாமையாளர் Sales director
மேலதிகமாக எதையும் படிக்காமல் தன் துறையை மாற்றிக்கொள்வதாயின் விற்பனை துறை பற்றி பரிசீலியுங்கள் என்கிறார் Sharon Reed Abboud
பயிற்சி அத்தியாவசியம் இல்லாதபோதும் கலகலப்பான சுபாவம் மிக அவசியமாகும். இத்தொழில் முகாமைத்துவ வாய்ப்புகளையும் தரக்கூடியது
2. இணைய பாதுகாப்பாளர் Security administrators, computer network
தொழிநுட்பம் அதிகமானோரை எட்டும்போது இணைய திருட்டுக்களும் அதிகரிக்கின்றன. இவ்வாறான இணைய திருட்டுகக்ளை தடுக்க, சீர்திருத்த இணைய பாதுகாப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். இது தொடர்பான கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பது அவசியமானதாகும்.
3. லிப்ட் பொருத்துபவர் / பழுது பார்ப்பவர் Elevator installer/repairer
லிப்ட்களை பொருத்துவது பழுதுபார்ப்பதே இவ்வேலையாகும். இத்துறையில் தேவையான பாட நெறியோடு சம்பளத்துடன் பயிற்சியும் வழங்கப்படுவது விசேட அம்சம்.
4. ரியல் எஸ்டேட் தரகர் Real estate broker
எப்போதும் ஒரு குறிப்பிட்ட வீத தரகுக்கூலி இவர்கட்கு கிடைக்கிறது. இத்தொழில் பொருளாதார ஏற்ற இறக்கங்களுடன் அன்னியோன்யமான தொடர்புகளாஇ கொண்டது.
5. Nuclear medicine technologist / Radiation therapist
வயதான மக்களின் தொகை அதிகரிக்கும்போது சிலவகை நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இவ்வாறான நோய்களுக்கு சிகிச்சையளிக்க அணு கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது. பாடநெறியை பூர்த்தி செய்தல் கட்டாயம்.
6. Radiation therapist
கென்ஸர் நோயாளிகளுக்கான சிகிச்சை முறை. கற்பிப்பவர்களுக்கும் ஆராயச்சி செய்பவர்கட்கும் மிகுந்த வாய்ப்புகளை கொண்ட துறை
7. நிர்மாண முகாமையாளர் Construction manager
நிர்மாண முகாமைத்துவம் சார்ந்த படிப்பு அவசியம். 24 மணிநேர வேலை இது.
8. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் Air traffic controller
விமான பயணஙள் பாதுகாப்பானவையாக் இருப்பதை உறுதி செய்வது இந்த வேலை. இதில் விமானங்களுக்கான நேரசூசிய வடிவமைப்பது, விமானங்களிடயே போதிய இடைவெளியை உறுதி செய்வது என்பனவும் அடங்கும். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கட்கு மிகுந்த தேவை காணப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியை பூர்த்தி செய்தல் வேண்டும்.
9. MRI தொழிநுட்பவியலாளர் MRI technologist
பொருத்தமான பாடநெறியை பூர்த்தி செய்வது அவசியம். மருத்துவ துறையில் மிகுந்த தேவைகளை கொண்ட தொழில் இது.
10. Video game designer
Video game designer கதைக்களத்தையும் விளையாட்டின் விதிகளையும் வடிவமைப்பர். software design மற்றும் computer programming பற்றிய அறிவு அவசியம்.