15 June, 2010

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்


"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"
ஆனாலும்.....

மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்
இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்
கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு
கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!


''நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?''
(புனித குர்ஆன் 55:60)

17 comments:

சௌந்தர் said...

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்//

அருமையான வரிகள் சூப்பர்....

நட்புடன் ஜமால் said...

நல்ல இடுக்கை ஃபெரோஸ் :)

கலகலப்ரியா said...

அருமையான பொன்மொழிகள்... சில பல நிகழ்கால நிகழ்வுகளுக்கு மிகவும் பொருந்துகிறது...

பகிர்வுக்கு நன்றி...

அன்புடன் நான் said...

இது என்னவோ எனக்காகவே எழுதியது போல் உள்ளது.
நல்ல சிந்தனை ... பாராட்டுக்கள்.

Kousalya Raj said...

ஒவ்வொரு வரியும் உன்னதம். வாழ்த்துகள் !

Rajakamal said...

மீண்டும் மீண்டும் படித்துப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டிய வரிகள் நீங்கள் சொன்னதை என் வாழ்கையில் கண்டு வருத்தப் பட்டதுண்டு என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆனலும் மீண்டும் உதவியே செய்ய வேண்டும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள் நன்மைக்கு நன்மையை தவிர கூலி உண்டா - அல் குர்ஆன் இதை விட வேறு வார்த்தை உண்டா நன்றி சகோதரா. பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டேன்.

Feros said...

///soundar said...

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம் ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்///

அருமையான வரிகள் சூப்பர்....///

நன்றி உங்களின் தொடரான பின்னூட்டத்துக்கு நீங்களும் கலக்குங்க ....

Feros said...

///நட்புடன் ஜமால் said...

நல்ல இடுக்கை ஃபெரோஸ் :)///

நன்றி ஜமால்...

Feros said...

///கலகலப்ரியா said...

அருமையான பொன்மொழிகள்... சில பல நிகழ்கால நிகழ்வுகளுக்கு மிகவும் பொருந்துகிறது...

பகிர்வுக்கு நன்றி...///

நன்றி தொடரான பின்னூட்டத்துக்கு நன்றி...
உங்களுக்கும் வாழ்த்துக்கள் ***

Feros said...

@///சி. கருணாகரசு said...

இது என்னவோ எனக்காகவே எழுதியது போல் உள்ளது.
நல்ல சிந்தனை ... பாராட்டுக்கள்.///

நண்பா உனக்கும் எனது பாராட்டுக்கள்

Feros said...

@@@///Kousalya said...

ஒவ்வொரு வரியும் உன்னதம். வாழ்த்துகள் !///
நன்றி நண்பா

Feros said...

@@@///Rajakamal said...

மீண்டும் மீண்டும் படித்துப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டிய வரிகள் நீங்கள் சொன்னதை என் வாழ்கையில் கண்டு வருத்தப் பட்டதுண்டு என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆனலும் மீண்டும் உதவியே செய்ய வேண்டும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள் நன்மைக்கு நன்மையை தவிர கூலி உண்டா - அல் குர்ஆன் இதை விட வேறு வார்த்தை உண்டா நன்றி சகோதரா. பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டேன்.///

என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆனலும் மீண்டும் உதவியே செய்ய வேண்டும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள்,
நண்பா மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் உலகில் பிரச்சினைகள் இல்லாமல் சந்தோசமாக இருக்கலாம்,

"ஆயிரம் கோடி வண்டிகளில் தானியம் வந்து குவிந்தாலும் தனக்குத் தேவை ஒரு படிதான் என்றும் பரந்து விரிந்த மாளிகை அமைந்தாலும் தான் படுக்கும் இடம் ஆறடி நிலம்தான் என்றும், எவனுக்கு தெளிவு பிறக்கிறதோ, அவனே வாழத் தெரிந்தவன்''

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

’எல்லாமே உங்களுக்கும்,இறைவனுக்கும் இடையில் தான்...’

- என்ன ஒரு சத்தியமான வார்த்தை!!!

சீமான்கனி said...

//உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்//

பாராட்டுகள்...ஃபெரோஸ்.இதுபோல் சிறப்பான இடுகைகளை ஃபெரோஸ் பக்கத்தில் பார்ப்பது ரெம்ப மகிழ்ச்சி இன்னும் நிறைய வர காத்திருக்கிறேன்...

அரபுத்தமிழன் said...

நல்லாருக்கே என்று படித்துக் கொண்டு வரும் போது

//எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..! //

இதைப் படித்தவுடன் 'அட' போட வைத்து விட்டது.

M. Azard (ADrockz) said...

//நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்//
அசத்துறீங்க, வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்ல பதிவு பெரொஸ்.நிதர்சன வரிகள்.