Google Pixel- the new future of Google

The new Google Pixel is a phone we really want to love, but we've not fallen head over heels for it just yet. The design and price are questionable – but there's an awful lot of potential under the hood.

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

உங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர

One of the biggest and most frequently asked question online in the Internet Marketing industry is "How do I get started"

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்.

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்

(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.

Showing posts with label computer. Show all posts
Showing posts with label computer. Show all posts

24 May, 2011

ஒரே நேரத்தில் கணணியின் எழுத்துருக்களை Preview பார்ப்பதற்கு

இணையதள வடிவமைப்பளார்கள் முதல் பட வடிவமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு Fonts மீது ஈர்ப்பு இருக்கும்.

மொத்தமாக நம் கணணியில் பல எழுத்துருக்கள்(Fonts) இருந்தால் ஒவ்வொரு Font ம் நம் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று சோதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்தப் பிரச்சினையை போக்குதற்காக ஒரு தளம் உள்ளது.

எழுத்தின் மேல் விருப்பம் உள்ள அனைவரும் நம் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை ஒவ்வொரு எழுத்துருவாக மாற்றி பார்த்து அதிலிருந்து சிறந்ததை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஆகும் நேரம் அதிகம் தான். ஆனால் இனி ஒரே நொடியில் நம் கணணியில் இருக்கும் Fonts Preview ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காகhttp://www.blogger.com/img/blank.gif ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Loading Fonts என்று இருக்கும் பொத்தானை சொடுகினால் போதும் அடுத்து வரும் திரையில் நம் கணணியில் Install ஆகி இருக்கும் Font அத்தனையின் Previewம் காட்டப்படும்.

Watermark என்று இருக்கும் கட்டத்திற்குள் நாம் எந்த வார்த்தைக்கான Preview பார்க்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்தால் போதும் ஒரே நொடியில் நம் கணணியில் நிறுவி இருக்கும் அத்தனை Fontsகளிலும் Preview காட்டப்படும்.

இணையதள முகவரி

02 July, 2010

ரைட் கிளிக் மெனு - கிபோர்ட் குறுக்கு வழி


கணணியில் வேலைசெய்யும்போது Right Click செய்ய mouse ஐ அசைப்பதற்கும் சோம்பேறியானவரா நீங்கள்? அல்லது இதன்மூலம் சில செக்கன்களை வீணடிக்கமுடியாதளவுக்கு பிசி ஆன ஆளா?


இப்பதிவு உங்களுக்கே...


சாதாரண எந்தவொரு windows keyboard இலும் படத்தில் உள்ள இந்த key ஐ காணமுடியும்। இது உங்களுக்காக Right Click இனை செய்வதற்கான key ஆகும்.





இந்த key ஐ உங்கள் keyboardஇல் காணாவிடின் Shift + F10 இனூடாகவும் இந்த வேலையை செய்யமுடியும்।





11 April, 2010

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.


குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.

recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.


temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.

laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.

laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.

தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.

அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.

ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

.

01 March, 2010

எச்.டி.எம்.எல் என்றால் என்ன ?

Feros Blogspot

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


HOW TO MEET LADIES?


எப்படி எச்.டி.எம்.எல்?
joke joke joke

22 February, 2010

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்
(How to Fix Folder Options Missing in Windows Explorer)
வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.



இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன. இவற்றில் ஒன்றின் மூலம் பிரச்சினையை சரி செய்யலாம்.

தீர்வு 1 registry ஐ எடிட் செய்தல்

Start
Run
இப்போது regedit என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்
HKEY_CURRENT_USER இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
Software இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Microsoftஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Windowsஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

CurrentVersionஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Policiesஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

Explorer இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்

வலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் பண்ணவும்.

இப்போது HKEY_LOCAL_MACHINE -> Software -> Microsoft -> Windows -> CurrentVersion -> Policies -> Explore வரும் மெனுவில்

வலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் (Delete) பண்ணவும்.

தீர்வு 2 Group Policy செற்றிங்குகளில் மாற்றஞ்செய்தல்
Start
Run
இப்போது gpedit.msc என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்
User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer.

வலது பக்கத்தில் “Removes the Folder Options menu item from theச Tools menu” என்று இருக்கிறதா என்று தேடவும். அதம் மீது ரைட் கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்யவும்.

Enabled என்றிருப்பதை Not Configured அல்லது Disabled. என்று மாற்றவும்

16 January, 2010

எல்லா ப்ரௌசர்களிலும் இருக்கும் ஹிஸ்டரியை ஒரே தரத்தில் அழிக்க வேண்டுமா?





maClear  ஐ முயற்சி செய்து பாருங்கள்

இது மோஸில்லா, எக்ஸ்புளோரர், குரோம் என எல்லா ப்ரௌசர்களிலும் வேலை செய்கிறது. இந்த புரோகிராமை ரன் செய்யமுன் எல்ல ப்ரௌசர்களையும் மூடவேண்டும்.

இது அல்பா வேர்ஷனில் இருக்கிறது.




IEclean, Privacy Cleaner , Internet Privacy Cleanerபோன்ற புறோகிறாம்களையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.